ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்த படம் 'வீரம்'. தமிழிலேயே சுமாரான வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தை தெலுங்கில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடிக்க ரீமேக் செய்து 'கட்டமராயுடு' என்ற பெயரில் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிட்டனர். விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறாத இந்தப் படத்திற்கு முதல் சில நாட்கள் மட்டுமே வசூல் திருப்திகரமாக இருந்தது. அதற்கடுத்த நாட்களில் குறைந்து, இரண்டாவது வாரத்தில் மிகச் சுமாரான வசூலைக் கூடப் பெற முடியாமல் தடுமாறியது.
கடந்த வாரம் வெளியான 'குரு' படத்திற்கு நல்ல விமர்சனமும், வரவேற்பும் கிடைக்க இந்தப் படத்தின் வசூல் 'கட்டமராயுடு' வசூலைப் பாதித்துள்ளது. இந்த வாரத்திலேயே பெரும்பாலான தியேட்டர்களில் 'கட்டமராயுடு' படத்தை தூக்கிவிடுவார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தமாக சுமார் 60 கோடி வசூலை மட்டுமே இந்தப் படம் பெறும் என்றும், 80 கோடிக்கும் மேல் வசூலித்தால்தான் படம் லாபத்தைத் தரும் என்கிறார்கள். அதனால் சுமார் 20 கோடி வரை இப்படத்திற்கு நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள். 'அத்தாரின்டிக்கி தாரோதி' படத்திற்குப் பிறகு பவன் கல்யாண் நடித்து வெளிவந்த 'சர்தார் கப்பார் சிங்' படமும் தோல்வியைத் தழுவிய நிலையில் தற்போது 'கட்டமராயுடு' படமும் தோல்வியைத் தழுவியுள்ளது. அதனால் 'வேதாளம்' படத்தை ரீமேக் செய்வதை பவன் கல்யாண் தள்ளி வைக்கலாம் என்கிறார்கள்.