ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எழுபது, எண்பதுகளில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை சரிதா. அதன்பின் மலையாள நடிகர் முகேஷை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார் சரிதா. பின்னர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்து அம்மா, அக்கா வேடங்களில் நடித்து வந்தார். அதுகூட அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வாய்ப்புகள் வந்தன. கடைசியாக சந்தோஷ் சிவன் இயக்கிய 'சிலோன்' படத்தில் சுனாமி அக்காவாக நடித்ததோடு சரி அதன்பின் ஆளையே காணோம்.. இடையில் கணவர் முகேஷுடன் விவாகரத்தும் ஆகிவிட்டது.
கடந்தவருடம் முகேஷ் கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் கமிஷனிடம் தவறான ஆதாரங்களை கொடுத்துள்ளார் என குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் சரிதா.. கிட்டத்தட்ட சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார் என்று நினைத்த நேரத்தில்தான் தற்போது மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் .நடித்திருப்பது தெரியவந்துள்ளது.. இந்தப்படம் வெளியானபின் மீண்டும் கேரக்டர் ரோல்களில் ஒரு ரவுண்டு வரும் முடிவில் இருக்கிறாராம் சரிதா.