ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எந்த திரையுலகம் ஆனாலும் நீண்ட நாட்கள் சூப்பர்ஸ்டார்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே சில அதிசயமான விஷயங்களை நடத்திக்கட்டுவது சாத்தியமாகும்.. ரஜினிக்கு மகளாக நடித்த மீனா அவருக்கு ஜோடியாக நடித்ததும் ஒரு அதிசயம் தான். பூர்ணிமாவுக்கு ஜோடியாக நடித்த மோகன்லால் அவரது மகளான சரண்யாவுக்கும் ஜோடியாக நடித்தையும் என்ன சொல்ல..? இதேபோலத்தான் மெகாஸ்டார் மம்முட்டியையும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆக்கியிருக்கிறாள் மீனாட்சி மகேஷ் என்கிற சிறுமி..
தற்போது மம்முட்டி நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும் 'தி கிரேட் பாதர்' படத்தில் மம்முட்டி-சினேகா தம்பதியின் மகளாக நடித்துள்ள சிறுமிதான் தான் இந்த மீனாட்சி மகேஷ்.. ஆச்சர்யம் என்னவென்றால் சரியாக 35 வருடங்களுக்கு முன் மம்முட்டி நடித்த 'யவனிகா' என்கிற படத்தில் அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் மீனாட்சியின் அப்பாவான மகேஷ் மேனன்.. இப்போது தனது மகளும் மம்முட்டியுடன் நடிப்பாள் என கனவிலும் நினைக்கவில்லை என்கிறாராம் மகேஷ் மேனன்