ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்கு திரை உலகில் கிங் எனும் அடைமொழியுடன் வலம் வரும் நடிகர் நாகார்ஜூனா அடைமொழிக்கேற்ப இன்னும் இளமையாக இருக்கின்றார் அதே போல் அவரது படங்களும் தொடர் வெற்றியை பதிவு செய்து வருகின்றன. அண்மையில் நாகார்ஜூனாவின் பக்திபடமான ஓம் நமோ வெங்கடேஷாய திரைப்படம் வெளிவந்தது. இப்படத்திற்கு பின்னர் நாகார்ஜூனா நடிக்கவிருக்கும் திரைப்படம் ராஜூ ஹாரி ஹாதி-2. தொகுப்பாளராக இருந்து ராஜூ ஹாரி ஹாதி படத்தின் வாயிலாக இயக்குனராக மாறினார் ஒமர். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் கமர்ஷியல் வெற்றியை பெற்றது. இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்துள்ள ஒமர் இப்படத்தில் நாகார்ஜூனா நாயகனாக நடிப்பதாகக் கூறினார். அதன்படி இப்படத்தில் நாகார்ஜூனாவின் கதாபாத்திரம் குறித்த பஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. பிவிபி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் நாகார்ஜூனாவுடன் ஜோடியாக நடிக்க ஹிந்தி நடிகை ஷ்ரதா கபூரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். அவர் மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் வேறு முன்னணி ஹிந்தி நடிகையை அனுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஆக பாலிவுட் நடிகையை தான் நாகார்ஜூனாவிற்கு ஜோடியாக்க வேண்டுமாம்..!