ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் நாகார்ஜுனா, நடிகை அமலா தம்பதியரின் ஒரே மகனான நடிகர் அகில் - பேஷன் டிசைனர் ஸ்ரியா பூபால் இருவருக்கும் மே மாதம் இத்தாலியின் மிகப் பிரம்மாண்டமாகத் திருமணம் நடத்த இரு வீட்டாரும் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால், கடந்த வாரம் திடீரென அவர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு இத்தாலிக்கு செல்ல முன்பதிவு செய்து வைத்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டார்களாம். இந்தத் தகவல் டோலிவுட்டில் வேகமாகப் பரவியது.
அதையடுத்து அகில் - ஸ்ரியா பூபால் இடையேயான திருணம் நின்றுவிட்டது என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மிகப் பெரும் கோடீசுவரரான ஜி.வி.கே.ரெட்டியின் மகளான ஸ்ரியா பூபால் ஸ்ரேயா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரதா கபூர், ஆலியா பட் உள்ளிட்டோருக்கு ஃபேஷன் டிசைனராக இருந்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரியா பூபாலைப் பார்த்துப் பழக ஆரம்பித்தார் அகில். அதன் பின் நெருங்கிய நண்பர்களான இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். இரு வீட்டாரது சம்மதத்துடன் இருவருக்கும் பெற்றோர்களே திருமண நிச்சயமும் செய்து வைத்தார்கள். இப்போது அகில், ஸ்ரியா இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் அகில் இந்தத் திருமணத்தை வேண்டாமென சொல்லிவிட்டதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாகார்ஜுனாவின் மற்றொரு மகனான நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கடந்த மாதம்தான் திருமண நிச்சயம் நடைபெற்றது. இவர்களது திருமணம் இந்த வருடக் கடைசியில் நடைபெற உள்ளது.
நாகார்ஜுனா குடும்பத்தில் அடுத்தடுத்து திருமணங்கள் நடைபெற உள்ள சூழ்நிலையில் ஒரு திருமணம் நிற்கும் அளவிற்குச் சென்றுள்ள தகவல் தெலுங்குத் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
இன்னும் அகில் - ஸ்ரியா பூபால் திருமணம் நின்று போனதா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.