பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் |
டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூன் சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் டீஜே படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு அபுதாபி செல்லவுள்ளது. ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். மகா சிவராத்திரியில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என தில் ராஜூ அறிவித்திருந்தார். அதற்கு முன்னதாக பிப்ரவரி 18ல் டீஜே படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெளியிடவுள்ளதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள இத்தகவலை தயாரிப்பாளர் தரப்பும் உறுதி செய்துள்ளது. அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக பூஜா ஹெஜ்டே நடிக்கும் டீஜே திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என தெரிகிறது.