ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கேரளாவில் நிலவிய ஒருமாத தியேட்டர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து ஒருவழியாக இன்று முதல் புதிய படங்கள் ரிலீசாக துவங்கியுள்ளன. முதல் ஆளாக துல்கர் சல்மான் நடித்த 'ஜோமொண்டே சுவிசேஷங்கள்' படம் இன்று வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ள இந்தப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இதில் ஒர் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் இந்தப்படத்திற்கு இதுநாள் வரை டிரைலரே வெளியிடப்படவில்லை..
இந்தப்படம் கடந்த டிசம்பர் மாதமே ரிலீஸாக வேண்டியது.. அதற்கு முன்னரே ஒரு டீசரையும் இரண்டு சாங் புரோமொக்களையும் மட்டுமே வெளியிட்ட இயக்குனர் சத்யன் அந்திக்காடு டிரைலர் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். காரணம் இது குடும்ப பின்னணியில் செண்டிமெண்ட், காதல் எல்லாம் கலந்த கலவையாக உருவாகியுள்ள படம்.. இதில் டிரைலரை உருவாக்கி வெளியிடும்போது, படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என ஓரளவு யூகித்துவிட முடியும்.. அதனால் படத்தின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால் தான் டிரைலர் இல்லாமலேயே படத்தை ரிலீஸ் செய்துள்ளார்களாம்.