மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
சாய் தரண் தேஜ் நடிப்பில் உருவாகியுள்ள வின்னர் திரைப்படத்தின் டீசர் வெளிவந்து மூன்று நாட்களில் ஒரு மில்லியன் வியூவ்ஸை கடந்துள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள வின்னர் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர இயக்குனர் கோபிசந்த் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். பிப்ரவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வின்னர் படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 24ல் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். லக்ஷ்மி நரசிம்ஹா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். சாய் தரண் தேஜ்ஜிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள இப்படத்தில் ஜெகபதிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அனுஷ்யா பரத்வாஜ் சாய் தரண் தேஜ்ஜுடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.