ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதிலும், தொடர்ந்து அவருக்கு பக்கபலமாக நின்று அவ்வப்போது அவரை வைத்து வெற்றிப்படங்களை இயக்கி நிவின்பாலியின் கேரியரை உயர்த்தியதிலும் இளம் இயக்குனர் வினீத் சீனிவாசனின் பங்கு ரொம்பவே அதிகம். கடந்த வருடம் கூட நிவின்பாலியை ஹீரோவாக வைத்து 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்ஜியம்' என்கிற சூப்பர்ஹிட் வெற்றியை கொடுத்தவர்.. அவர்தான் இந்த வருடத்தில் நயன்தாராவை நிவின்பாலியுடன் ஜோடியாக நடிக்கவைத்துவிடவேண்டும் என உறுதி எடுத்துள்ளாராம்.
இதன்மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கவும் திட்டம் வைத்திருக்கிறாராம் வினீத் சீனிவாசன்.. வினீத்தின் தம்பி தயன் சீனிவாசனும் இப்பொது சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.. ஆனால் நடிப்பை கைவிட்டுவிட்டு, தைரக்சனுக்குள் நுழைய விரும்புகிறார் தயன்.. அதனால் அவரது முதல் படத்தை வேர்ரிகரமாக்கும் எண்ணத்தில் அந்தப்படத்திற்கு கதை எழுதி வருகிறார் வினீத் சீனிவாசன்.. தான் நிவின்பாலியை அறிமுகப்படுத்தி, தானும் இயக்குனராக அறிமுகமானதுபோல, தனது தம்பி இயக்கும் படத்திலும் நிவின்பாலி தான் ஹீரோ என்பதை ஏற்கனவே உறுதிசெய்துவிட்டார்.
ஆனால் படம் மாஸ் ஆக வரவேண்டும் என்று நினைக்கும் வினீத் சீனிவாசன் நிவின்பாலிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்கவைக்கும முயற்சிகளில் இறங்கியுள்ளாராம்.. நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் நயன்தாரா, தனது சொந்த மொழியில் அதுவும் ஒரு திறமையான இயக்குனருடன், இளம் நடிகருடன் நடிக்க மறுப்பு சொல்லவா போகிறார்..?