ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ |
பிரபல தெலுங்கு நடிகரும் இந்துபூர் எம்.எல்.ஏவுமான பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள சரித்திர திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்து கொள்ளுமாறு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை பாலகிருஷ்ணா நேரில் சென்று அழைத்துள்ளார். இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இப்படம் பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படமாகும். இப்படத்தின் துவக்கவிழாவில் சந்திரசேகர ராவ் கலந்து கொண்டு படப்பிடிப்பை துவங்கி வைத்தார். அவருடன் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தசரி நாராயண ராவ், கே ராகவேந்திர ராவ் போன்ற டோலிவுட் பிரபலங்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஜனவரி 12ல் திரைக்கு வரவிக்கும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் டோலிவுட்டின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் முன்னாள் கனவுகன்னி ஹேமமாலினி ராஜமாதாவாக நடித்துள்ளார்.