ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் பட தலைப்பில் தெலுங்கில் திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. இயக்குனர் பாபி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருக்கும் படத்திற்கு விஸ்வரூபம் என தலைப்பு தேர்வு செய்துள்ளனர். ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரரும் நடிகருமான கல்யாண் ராம் தனது என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இத்தலைப்பை சமூக வலைதளங்களில் பரப்பும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து ஜனதா கேரேஜ் எனும் வெற்றிப்படத்தைக் கொடுத்த ஜூனியர் என்.டி.ஆர் அப்படத்திற்கு பின்னர் பாபி இயக்கத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக அனுபமா பரமேஷ்வரன் ஒப்பந்தமாகியுள்ளார்.