ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
பாலகிருஷ்ணா நடித்து வரும் வரலாற்று திரைப்படமான ‛கௌதமிபுத்ர சதர்கனி' படத்தை இயக்குனர் க்ரிஷ் இயக்கி வருகிறார். பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா நடிக்கும் இவ்வரலாற்று திரைப்படத்தின் டிரைலர் டிசம்பர் 16ல் வெளிவரவுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் கௌதமிபுத்ர சதர்கனி படத்தை பாலகிருஷ்ணா, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் வெகு விமர்சையாக இப்படத்தை வரவேற்க ஏற்பாடு செய்து வருகின்றனர். கௌதமிபுத்ர சதர்கனி படத்தின் தயாரிப்பாளர்கள் டிசம்பர் 16ல் திரைக்கு வரவிருக்கும் டிரைலரை ஒரே நேரத்தில் 100 திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டுள்ளனர். பாலிவுட் நடிகையும் அரசியல் பிரபலமுமான ஹேமமாலினி கௌதமிபுத்ர சதர்கனி படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக நடிக்கின்றார். ராஜீவ் ரெட்டி பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் கௌதமிபுத்ர சதர்கனி படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.