ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் | தேசிங்குராஜா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு | அம்மா, தங்கச்சி வேடங்களில் சுவாசிகா | ஒரு படத்துக்கு 5 இசையமைப்பாளர்கள் | மீண்டும் ஒரு ‛ஜென்ம நட்சத்திரம்' : 6 மணி 6 நிமிடம் 6 நொடியில் வெளியான தலைப்பு | தயாரிப்பாளர்களை கண்டித்து: பெப்சி ஒரு நாள் வேலை நிறுத்த அறிவிப்பு | 'மையல்' நாயகிக்கு அழகும், அம்சமும் இருக்கிறது : கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயகுமார் பாராட்டு | தலைப்பு பிரச்னை : சந்தானம் படத்திற்கு தடை கேட்டு வழக்கு | பிளாஷ்பேக்: வில்லன் வேடத்தால் சினிமாவை விட்டு விலகிய கராத்தே மணி |
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த ரஜினி தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் மீண்டும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் மற்றும் முதல் பாகத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர எஸ்.ஜே .சூர்யா, பஹத் பாசில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு நடிகர் பால கிருஷ்ணாவும் ஒரு கெஸ்ட் ரோலில் போலீசாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரிடத்தில் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார்கள். சிறப்பு ரோல் என்றாலும் அவருக்கு கணிசமான சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.