ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
பாலிவுட்டில் ‛அனிமல்' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை திரிப்தி திம்ரி. இவரின் அடுத்த படமாக ‛தடக் 2' ஆக., 1ல் வெளியாக உள்ளது. தமிழில் வெளியான ‛பரியேறும் பெருமாள்' படத்தின் ரீ-மேக் இது. சாஷியா இக்பால் இயக்கி உள்ளார். நாயகனாக சித்தாந்த் சதுர்வேதி நடித்துள்ளார். இந்த படத்தை விளம்பரப்படுத்துவதில் பிஸியாக உள்ளார் திரிப்தி. அவர் அளித்த பேட்டி...
‛தடக் 2' பட வாய்ப்பு உங்களுக்கு எப்படி வந்தது?
ஒரு நாள் கரண் ஜோஹரிடமிருந்து எனக்கு போன் வந்தது. சாஷியா இக்பால் ஒரு நல்ல இயக்குனர் அவர் தனது படத்தின் கதையை உங்களிடம் சொல்ல விரும்புவதாக கூறினார். மறுநாள் கதையைக் கேட்டபோது எனக்கு பிடித்திருந்தது. கதை சொல்லும்போதே, சாஷியா தனது தொலைநோக்குப் பார்வையை பற்றி மிகவும் தெளிவாக இருக்கிறார் என்பதையும், அவர் ஒரு வலிமையான இயக்குனர் என்பதையும் புரிந்து கொண்டதால், இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
உங்கள் கதாபாத்திரம், சித்தாந்த் உடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க...?
இந்த படத்தில் விதி என்ற வேடத்தில் நடித்துள்ளேன். அவள் ஒரு வலிமையான, ஆனால் உணர்ச்சி வசப்படக்கூடிய பெண். தன் காதலுக்காகவும், சுயமரியாதைக்காகவும் சமூகத்துடன் போராடத் தயாராக இருக்கிறாள். இந்த கதாபாத்திரத்தின் பயணம் ஊக்கமளிக்கிறது. சித்தாந்துடன் பணிபுரிந்தது நல்ல அனுபவமாக இருந்தது. அவர் கடின உழைப்பாளி மற்றும் நேர்மையான நடிகர். அவருடனான கெமிஸ்ட்ரி படத்தில் மிகவும் இயல்பாக வளர்ந்தது. அது திரையில் உண்மையாக தெரியும்.
உங்களுக்கு என்ன மாதிரியான படங்களில் நடிக்க ஆசை?
ஆக்ஷன் படங்களில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்று நான் நினைப்பதால், ஆக்ஷன் படங்களில் நடிக்க விரும்புகிறேன். இதுதவிர எனக்கு எப்போதாவது வாய்ப்பு கிடைத்தால், மீனா குமாரி மற்றும் மதுபாலாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் பணியாற்ற ஆசை.
தடக் படம் வெளியானபோது நீங்கள் என்ன செய்தீர்கள்?
அநேகமாக அந்த சமயத்தில் நான் ‛லைலா மஜ்னு' படத்தில் நடித்து முடித்திருப்பேன். மேலும் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நடிகர் சவுரப் சச்தேவாவுடன் ஒரு பயிற்சி பட்டறையிலும் ஈடுபட்டிருப்பேன். அதோடு ‛புல் புல்' படத்திற்காகவும் தயாராகி இருப்பேன்.