மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜோசப் கொஸ்ன்க்ஷி இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு உலகளவில் வெளியான படம் 'எப் 1' (பார்முலா 1). இதில் பிராட் பிட், டாம்சன் இத்ரிஸ், கெரி கான்டன், ஜாவீர் பார்டன் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர். ஆப்பிள் ஸ்டூடியோ தயாரித்த இந்த படத்தை வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டனர்.
முழுக்க முழுக்க பார்முலா கார் ரேஸை மையப்படுத்தி வெளியான இத்திரைப்படம், வெளிநாடுகளில் வசூலைக் குவித்தது. பொதுவாகவே இந்தியாவிலும் ஹாலிவுட் படங்களுக்கு நல்ல வசூல் கிடைக்கும். அந்தவகையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்தவாரம் வரை இந்த படத்திற்கு இந்தியாவில் மட்டும் 80 கோடி வசூல் கிடைத்த நிலையில் இப்போது ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளது. இந்த தகவலை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.