ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

தெலுங்கு சினிமாவின் அதிரடி நாயகன் என்.டி.பாலகிருஷ்ணா, வெறும் கையால் ரயிலை நிறுத்துவது, இரண்டு கைகளில் இரண்டு கார்களை தூக்கி அடிப்பது, ஒரே நேரத்தில் பத்து பேரை பந்தாடுவது என இவரது பட ஆக்ஷன் காட்சிகள் பிரபலம். இதனை அவரது ரசிகர்கள் ரசித்தாலும் பொது வெளியில் பெரிதாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது அவர் நடித்து வரும் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதிலும் இவர் பத்து பேரை தலையில் தூக்கி வீசுவது மாதிரியான காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த படத்தை போயபதி ஸ்ரீனு இயக்கி உள்ளார். ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, எம்.தேஜஸ்வினி நந்தமுரி தயாரித்துள்ளனர். இந்த படம் பான் இந்திய படமாக செப்டம்பர் 25ம் தேதியன்று வெளியாகிறது.
டீசரில் வெளியாகி உள்ள காட்சிகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து பாலகிருஷ்ணா கூறியிருப்பதாவது, ''ரசிகர்கள் அதிரடி படங்களின் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள். அவர்களை எளிதில் திருப்திபடுத்தவே முடியாது. எனது படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கிறது. எனவே தான் அவர்கள் விரும்பும்படியான காட்சிகள் இருக்கும் வகையில் பார்த்து கொள்கிறேன். லாஜிக் பற்றி எனக்கு கவலை இல்லை. ரசிகர்களின் மகிழ்ச்சி, அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே என் கடமை. அதற்காக எந்த ரிஸ்க்கும் நான் எடுப்பேன்'' என்கிறார் பாலகிருஷ்ணா.




