ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
ஒரே படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் எடுத்துவைத்த கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஒன்றுக்கு ரசிகர்களிடம் ரெஸ்பான்ஸ் இல்லையென்றால், அந்த கிளைமாக்ஸை தூக்கிவிட்டு இன்னொரு கிளைமாக்ஸை மாற்றுவார்கள்.. அல்லது இருமொழியில் உள்ள நடிகர்கள் நடிக்கும் இருமொழிப்படம் என்றால் மொழிக்கு ஒன்றாக க்ளைமாக்ஸ் வைப்பதும் வழக்கம் தான். ஆனால் ஒரே படத்தில் இரண்டு க்ளைமாக்ஸ்கள் இடம்பெறுவது அபூர்வமான செயல்.. எப்போதாவதுதான் அப்படி ஒரு படம் அமையும்.. கடந்த 2014ஆம் வருடம் பிருத்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'செவன்த் டே' படம் அந்த வகையைச் சேர்ந்ததுதான்..
இந்தப்படத்தை இயக்கியவர் ஷியாம்தர்.. கிளைமாக்ஸில் என்ட் கார்டு போடும் நேரத்தில் சடாரென இன்னொரு கிளைமாக்ஸுக்கான காட்சிகளை காட்டி ரசிகர்களை வாய்பிளக்க வைத்தவர்.. இதனாலேயே ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டவர். தனது இரண்டாவது படத்தை இயக்குவதற்காக காத்திருந்தவருக்கு அவரது திறமைக்கேற்ற பரிசாக மம்முட்டி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.. வரும் ஜனவரியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.. சமீபத்தில்தான் திருமணமான சந்தோஷத்தில் இருக்கும் ஷியாம்தருக்கு இது மம்முட்டி தந்த கல்யாணப்பரிசு என்றே சொல்லலாம்.