மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய குருநாதர் இயக்குனர் பாசிலின் மகன் என்பதால் பஹத் பாசிலின் மீது மோகன்லாலுக்கு தனிப்பட்ட வாஞ்சையும் பிரியமும் உண்டு.. பஹத் பாசிலுக்கு மோகன்லால் ஒரு சூப்பர்ஸ்டார் என அறியும் வயது வந்தபோது, அட ஒரு சூப்பர்ஸ்டார் நம் வீட்டிற்கு அப்பாவை சந்திக்க வந்து செல்கிறாரே என்கிற குஷி ஏற்பட தொடங்கியதாம்.. அன்றுமுதல் மோகன்லால் தனது வீட்டிற்கு வரும்போதெல்லாம் தவறாமல் அவருடன் உரையாடுவது வழக்கம்..
ஆனால் அப்படி உரையாடும் சமயங்களில் மோகன்லால் பஹத் பாசிலிடம் சினிமாவைப்பற்றி பேசவே மாட்டாராம்.. மற்றபடி தங்கள் இருவருக்கும் பிடித்தமான கார் சப்ஜெக்ட்டுக்கு தாவி விடுவாராம். மார்க்கெட்டில் என்னென்ன புதுவித கார்கள் வந்திருக்கின்றன, அவற்றின் சிறப்புகள் என்ன என்பது குறித்து விலாவாரியாக பேசுவாராம். அதற்கேற்றாற்போல் மோகன்லால் ஒவ்வொரு முறையும் அவரது வீட்டுக்கு வரும்போது விதவிதமான கார்களில் வருவதை பார்த்து பார்த்து பஹத் பாசிலுக்கும் கார்கள் மீதான ஆர்வம் அதிகமாகி விட்டதாம். தனக்கு இப்போதும் கார்கள் மீது தனி பிரியம் தொடர்கிறது என்றால் அதற்கு காரணம் மோகன்லால் தான் என்கிறார் பஹத் பாசில்.