2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

திலீப்-காவ்யா மாதவன் திருமணம் ஒரு தரப்புக்கு சந்தோஷத்தையும் மற்றொரு தரப்பினருக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தி இருப்பது மறுக்க முடியாத உண்மை.. ஆனால் இதில் இந்த இருவர் அல்லாத இன்னொரு தரப்பினருக்கு இந்த திருமணம் திடீர் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திலீப்பை வைத்து தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்கள் தரப்புதான் அது.. காரணம் திலீப் திருமணத்தால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரிடம் எழுந்துள்ள எதிர்மறையான கருத்துக்கள் அடுத்தடுத்து வெளியாகும் திலீப்பின் படங்களை, அவற்றின் வசூலை பாதிக்குமோ என்கிற அச்சம் இயல்பாகவே அவர்களுக்கு எழுந்துள்ளது..
குறிப்பாக திலீப் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' என்கிற படத்தின் தயாரிப்பாளர் தான், தற்போது கைகளை பிசைந்தபடி குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறாராம்.. ஆனால் விநியோகஸ்தர்களோ திலீப்-காவ்யா மாதவன் திருமணத்தால் அவரது படங்களுக்கு எந்த பாதிப்பும் வராது, அதனால் இது குறித்து அலட்டிக்கொள்ளவே தேவையில்லை என்கிறார்கள். அதற்கு உதாரணமாக முந்தைய சம்பவம் ஒன்றையும் குறிப்பிடுகிறார்கள்..
அதாவது திலீப், மஞ்சு வாரியருடன் திருமண விவாகரத்து செய்வதாக அறிவித்தபோது, இதேபோல அவருக்கு எதிரான அலை எழுந்தது உண்மை.. அதனை தொடர்ந்து அந்த சமயத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த 'ரிங் மாஸ்டர்' படம் வசூலில் நல்ல அடி வாங்கும் என்றே கணக்கிட்டார்கள்.. ஆனால் படமோ சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி லாபத்தை அள்ளியது. பொதுவாகவே ரசிகர்கள், தங்களது அபிமான நடிகர்களின் சொந்த வாழ்க்கையை திரைப்படங்களுடன் குழப்பிக்கொள்வதில்லை என்று தைரியம் சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள்..