2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

இரண்டு தினங்களாக மம்முட்டி கலந்துகொண்ட குடும்ப நிகழ்ச்சி போட்டோக்கள் சில, இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன. பலரும் அது மம்முட்டியின் சகோதரர் மகனான நடிகர் மஹ்பூல் சல்மானின் திருமண நிகழ்வில் எடுத்த போட்டோ என்றே பகிர்ந்து வருகின்றனர். அதையே செய்தியாக பரப்பியும் வருகின்றனர்.. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. மஹ்பூல் சல்மானும் கிட்டத்தட்ட திருமண உடை அணிந்த ஒரு இளம்பெண்ணும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படமும் அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் இருக்கிறது..
மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை போலவே, அவரது தம்பி இப்ராஹீம் குட்டியின் மகன் மஹ்பூல் சல்மானும் கடந்த நான்கு வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். பெயர் சொல்லும் அளவுக்கு 'பிரேக்' தரும் படங்களிலோ, கதாபாத்திரங்களிலோ இன்னும் மஹ்பூல் சல்மான் தனது திறமையை வெளிப்படுத்தவில்லை என்றாலும் வண்டி ஓரளவு சீராகத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. தனது பெரியப்பா மம்முட்டி கதாநாயகனாக நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான 'கசாபா' படத்தில் கூட முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் மஹ்பூல் சல்மான்.
சினிமாவில் இன்னும் கொஞ்சம் சாதித்துவிட்டு திரோனம் செய்வதுதான் அவரது திட்டம் இந்தநிலையில் இப்படி ஒரு செய்தி வெளியானதை கண்டு, அதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் மஹ்பூல் சல்மான்.. அந்த போட்டோ தங்களது குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டது உண்மைதான் என்றும், ஆனால் தனக்கு திருமணம் நடக்கவில்லை, ஏன் நிச்சயம் கூட ஆகவில்லை என்றும், அப்படி எதுவும் இருந்தால் அனைவருக்கும் முறையாக அறிவித்துவிட்டே திருமணம் செய்வே என்றும் விளக்கம் கூறியுள்ளார் மஹ்பூல் சல்மான்.