ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் அமிதாப் பச்சன் தற்போது சர்கார் 3 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டைரக்டர் ராம் கோபால் வர்மா இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சர்கார் 3 பட சூட்டிங் நடக்கும் இடத்திற்கே வந்து அமிதாப்பை சந்தித்துள்ளாராம். அவர், தெலுங்கில் ரித்து என்ற படத்தில் அமிதாப் நடிக்க வேண்டும் அமிதாப்பிடம் கேட்டுள்ளாராம். அந்த படத்தில் சிறிய வேடத்தில் அமிதாப் நடிக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் பாலகிருஷ்ணா கேட்டுக் கொண்டாராம். அவரது கோரிக்கையை ஏற்று, ரித்து படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த அமிதாப், தேதியும் கொடுத்து விட்டாராம். அந்த படத்தில் 17 நாட்கள் மட்டுமே அமிதாப் நடிக்க உள்ளாராம்.