ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
மலையாளத்தில் மோகன்லால் நடித்த ஒப்பம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே அவர் நடித்த இன்னொரு படமான புலிமுருகனும் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆக, மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள இரண்டு படங்களுமே தற்போது சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் 400 தியேட்டர்களில் வெளியான புலிமுருகன் ஐந்தே நாட்களில் ரூ. 20 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதையடுத்து, அப்படத்தை மேலும் பல்வேறு அயல்நாட்டு மொழிகளில் டப் செய்து வெளியிடும் வேலைகளில் புலிமுருகன் படக்குழு இறங்கியுள்ளது.
அந்த வகையில், தற்போது அப்படத்தை ஆங்கிலம், இந்தி, சீனா, வியட்நம், ஜப்பான் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யும் பணிகள் நடக்கிறதாம். ஆக, தற்போது சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள புலிமுருகன், இன் னும் பெரிய அளவில் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மோகன்லால் அடுத்தபடியாக நடிக்கும் புதிய படங்களையும் உலக அளவில் வெளியிடும் அடுத்தக்கட்ட முயற்சிகளிலும் இறங்குகிறார்களாம்.