ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடித்து வரும் பக்தி திரைப்படமான ஓம் நமோ வெங்கடேஷாய எனும் படத்தை இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்குகின்றார். பெருமாள் பக்தர் ஹாத்திராம் பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஹாத்திராம் பாபாவாக நாகார்ஜூனா நடிக்க, அனுஷ்கா, விமலா ராமன், ப்ரக்யா ஜெய்ஸ்வால் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
2017 ஜனவரி 14ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள ஓம் நமோ வெங்கடேஷாய படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா டிசம்பர் 24 அன்று திருப்பதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெருமாள் பெருமையைச் சொல்லும் பக்தி படம் என்பதால் இத்திரைப்படத்தின் முக்கிய நிகழ்வுகளுக்கு சனிக்கிழமையை இயக்குனர் தேர்வு செய்கின்றார். ஜூலை 2 சனிக்கிழமை அன்று இத்திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. அதே போல் டிசம்பர் 24 சனிக்கிழமையில் பாடல்களை வெளியீட திட்டமிட்டுள்ள இயக்குனர், 2017 ஜனவரி 14 சனிக்கிழமையில் திரைப்படத்தை வெளியீட முடிவு செய்துள்ளார்.