ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் மலையாளத்தில் உருவாகியுள்ளது மோகன்லால் நடித்துள்ள 'புலி முருகன்' படம்.. அக்-7ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியான தினத்தில் இருந்தே இதனை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. படம் முழுவதுமே காட்டுக்குள் எடுக்கப்பட்டுள்ளதால் ரொம்பவே ரிஸ்க்கான காட்சிகளில் தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்து நடித்துள்ளாராம் மோகன்லால். குறிப்பாக தனக்கு காய்ச்சல் வந்து உடம்பு சரியில்லாத நிலையிலும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் சோர்வில்லாமல் நடித்தாராம்.
இதுபற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பகிர்ந்துகொண்ட படத்தின் இயக்குனர் வைசாக், மோகன்லாலை தாங்கள் வருத்தப்படுத்திய ஒரு நிகழ்வையும் குறிப்பிட்டார். அதாவது மோகன்லாலே காய்ச்சலுடன் உடல்நிலை சரியில்லாமல் நடித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவர் ரிவர்ஸ் டைவிங் ஷாட் ஒன்றை ஒரே டேக்கில் மிகவும் பர்பெக்ட்டாக செய்து முடித்தாராம்.. ஆனால் டெக்னிகல் தவறுகள் காரணமாக மோகன்லால் அந்த காட்சியில் எட்டுமுறை திரும்ப திரும்ப நடிக்குபடி ஆகிற்றாம். இருந்தாலும் முகம் கோணாது நடித்துக்கொடுத்தராம் மோகன்லால். படக்குழுவினர் செய்த தவறுக்காக மோகன்லாலிடம் மன்னிப்பு கேட்டாராம் இயக்குனர் வைசாக்.. ஆனால் இதெல்லாம் சகஜம் தானே என அதைக்கூட மோகன்லால் பெரிது படுத்தவில்லையாம்.