விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஒரு ஹீரோவை வைத்து ஹிட் கொடுத்தால் அடுத்ததாக அதே ஹீரோவை வைத்து அந்த இயக்குனர் அடுத்த படத்தை இயக்குவதைத்தானே பார்த்திருக்கிறோம்.. ஆனால் துல்கர் சல்மானை வைத்து 'சார்லி' என்கிற ஹிட் படத்தை இயக்கி, அதன்மூலம் அவருக்கு கேரளா அரசின் சிறந்த நடிகருக்கான விருதை வாங்கி கொடுத்தவர் இயக்குனர் ஆர்.உன்னி.. அடிப்படையில் கதாசிரியரான ஆர்.உன்னி, துல்கரின் அடுத்த படத்திற்கு கதை மட்டுமே எழுதுகிறார்.. படத்தை இயக்கப்போவது மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லால்ஜோஸ்.
லால்ஜோஸும் துல்கர் சல்மானும் ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன் இணைந்து 'விக்ரமாதித்யன்' என்கிற பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படத்தை கொடுத்துள்ளார்கள்.. இன்றுவரை அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் கமர்ஷியல் படமாக துல்கர் பாக்கெட்டில் இருப்பது இந்த ஒரு படம் தான்.. ஆகவே மீண்டும் இவர்கள் இருவரும்.. இல்லையில்லை, ஆர்.உன்னியுடன் சேர்த்து மூவரும் கூட்டணி சேர்வதால் இப்போதே வெற்றியை உறுதி செய்துவிடலாம் என்கிறார்கள் மலையாள திரையுலகினர். தற்போது சத்யன் அந்திக்காடு மற்றும் அமல் நீரத் ஆகியோரின் படங்களில் மாறி மாறி நடித்துவரும் துல்கர் சல்மான், அவற்றை முடித்ததும் லால்ஜோஸின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தெரிகிறது.