சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
நாகார்ஜூனா நடிப்பில் இவ்வருடம் வெளிவந்த சொக்கடே சின்னி நயன, ஊபிரி என இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன. இதில் சொக்கடே சின்னி நயன திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். நாகார்ஜூனா இப்படத்தினை தயாரிக்கின்றார். அடுத்த மாதம் துவங்கவிருக்கும் இப்படத்திற்கு தலைப்பு தேடுவதில் இயக்குனர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஒக்கசாரி இது சூடவா என இப்படத்திற்கு பெயரிட பரிசீலனை நடைபெற்று வருகின்றதாம். முதன்முறையாக இப்படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடிக்கின்றார். அக்டோபர் முதல் வாரத்தில் நாக சைதன்யா நடித்துள்ள பிரேமம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகின்றது.