ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாள சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் நம்ம ஊர் சந்தானம் போல தவிர்க்க முடியாத நண்பர் கேரக்டரில் வந்து காமெடியில் கலக்குபவர் நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ்.. நம்பர் ஒன் காமெடியன் ஆனாலே, அடுத்து ஹீரோவாகும் ஆசை தானாகவே தோன்றிவிடுமே.. ஆனால் அஜு வர்கீஸ் அந்த வேண்டாத ஆசையையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு, பிசியான காமெடியான வலம் வருகிறார். குறிப்பாக இவரும் நிவின்பாலியும் இணைந்தால் அந்தப்படம் சூப்பர் ஹிட்டாகும் என்பது எழுதப்படாத விதியாகவே மாறிவிட்டது.
புதிய படங்களிலும் இவருக்கு வாய்ப்பு வருகிறது.. சீனியர் நடிகர்களும் கூப்பிடுகிறார்கள் என கடந்த வருடத்தை விட இந்த வருடம் ரொம்பவே பிசியான ஆளாக மாறிவிட்டார்.. அந்தவகையில் இந்தம் ஓணம் பண்டிகைக்கு மட்டும் அஜு வர்கீஸ் நடித்த நான்கு படங்கள் வெளியாகின்றன. அதில் முக்கியமானவை மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள 'ஒப்பம்', திலீப்புடன் இணைந்து நடித்துள்ள 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்' வினீத் சீனிவாசனுடன் 'ஒரு முத்தச்சி கதா மற்றும் குஞ்சாக்கோ போபனுடன் இணைந்து நடித்துள்ள 'கொச்சவ்வா பவுலோ அய்யப்பா கோயில்ஹோ' என நான்கு படங்கள் ஒரு காமெடி நடிகருக்கு வெளியாவது சாதனை விஷயம் தான்.