ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் திரைப்படத்தில் சமந்தா மற்றும் நித்யா மேனன் நாயகிகளாக நடிக்கின்றனர். இதில் நித்யா மேனன், ஜூனியர் என்.டி.ஆரின் மனைவியாக நடிக்கின்றாராம். பொதுவாக படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நித்யா மேனன், இப்படத்தில் தனக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், பாடல்கள் வெளியீட்டு விழா உள்ளிட்ட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நித்யா மேனன் தனது கதாபாத்திரம் மற்றும் ஜனதா கேரேஜ் திரைப்படம் குறித்தும் பேசியுள்ளார். கட்டுப்பாடுகளைக் கடந்து சுதந்திரமாக இருக்க துடிக்கும் ஒரு பெண்ணாக ஜனதா கேரேஜ் படத்தில் நடித்திருப்பதாகக் கூறிய நித்யா மேனன் முதன் முறையாக ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, அதிலும் அவருக்கு ஜோடியாக நடிப்பது மேலும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.