ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அடுத்தபடியாக தெலுங்கு சினிமாவில் அழுத்தமாக கால் பதித்து விட வேண்டும் என்பதற்கான முயற்சிகளையும் முடுக்கி விட்டி ருக்கிறார். அந்த வகையில், ஏற்கனவே அய்ன இஷ்டம் நவ்வு -என்ற படத்தில் நடித்திருப்பவர் தற்போது நானிக்கு ஜோடியாக நேனு லோக்கல் -என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, தமிழில் அஜீத் நடித்து வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
மேலும், தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடித்து விட்டதால் தெலுங்கில் கீர்த்தி சுரேஷ்க்கு நல்ல வரவேற்பு உள்ளதாம். அதனால் இந்த தருணத்தை பயன்படுத்தி அங்குள்ள முன்னணி ஹீரோக்களுடனும் பெரிய ரவுண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக தெலுங்கு டைரக்டர்களை சென்னைக்கு அழைத்தும் கதை கேட்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதோடு, வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் தமிழில் ஸ்ருதிஹாசன் நடித்த ரோலில் நடிப்பதால், இதுவரை நடித்ததை விடவும் இந்த படத்தில் ஓரளவு கவர்ச்சிகரமான உடை யணிந்து நடிப்பதற்கும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.