ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஷால் நடித்த சண்டக்கோழி திரைப்படம் தெலுங்கில் பண்டெம் கொடி என்ற பெயரில் வெளிவந்து தெலுங்கிலும் வெற்றி பெற்றது. அது முதல் விஷாலின் பல தமிழ் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது. அதே போல் தற்போது இயக்குனர் சூராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா ஜோடி சேர்ந்து நடிக்கும் கத்திச்சண்டை திரைப்படமும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளிவரவுள்ளது. தெலுங்கில் விஷால் படங்களை வெளியிடும் தயாரிப்பாளர் ஹரி, கத்திச்சண்டை படத்தையும் வெளியிடுகிறார். தமிழில் விஷால் பிலிம் பேக்ட்ரி நிறுவனத்தின் சார்பில் கத்திச்சண்டை படத்தை விஷால் தயாரிக்கின்றார். இப்படத்திற்கு தெலுங்கில் ஒக்கடோச்சாடு என பெயரிட்டுள்ளனர். பிரபல வில்லன் நடிகர் ஜெகபதி பாபு இப்படத்தில் வில்லனாக நடிக்கின்றார்.