விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
அனுஷ்கா நடித்த ருத்ரம்மா தேவி படத்தில் கோன கன்னா ரெட்டி என்றொரு அதிரடி வேடத்தில் நடித்தவர் அல்லு அர்ஜூன். தெலுங்கு சினிமாவின் இளவட்ட நடிகர்களில் குறிப்பிடத்தக்கவரான அல்லு அர்ஜூனுக்கு ஆந்திராவில் நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்களாம். அதனால் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட்டாகி வருகிறதாம். ருத்ரம்மா தேவி படம் மூலம் தமிழக ரசிகர்களுக்கும் பரிட்சயமாகி விட்டார் அல்லுஅர்ஜூன்.
மேலும், இவருக்கு ஆந்திராவுக்கு நிகராக கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்களாம். மலையாள நடிகர்களை தவிர வேற்று மாநில நடிகர் ஒருவருக்கு அங்கு அதிக வரவேற்பு உள்ளது என்றால் அது அல்லுஅர்ஜூனுக் குத்தானாம். அதனால் இதுவரை தெலுங்கு ரசிகர்களை மட்டுமே கருத்தில் கொண்டு கதைகளை செலக்ட் பண்ணி நடித்து வந்த அல்லுஅர்ஜூன், இனிமேல், கேரளத்து ரசிகர்களின் ரசனைக்கேற்ற கதைகளையும் ஓகே செய்து நடிக்கப்போகிறாராம். ஆனால் அந்த கதைகளும் தெலுங்கு படங்களுக்கு இணையாக பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ளதாம்.