ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாளத்தில் மம்முட்டியை வைத்து 'தொம்மனும் மக்களும்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை எடுத்து, அதை தமிழில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டு, விக்ரமை வைத்து 'மஜா'வாக மாற்றி பிளாப் கொடுத்தாரே அவர் தான் இயக்குனர் ஷபி. மலையாளத்தில் சூப்பர்ஹிட், பிளாக் பஸ்டர் ரெக்கார்டுகள் பல அவரது கைவசம் உண்டு. இன்றும் மலையாள சேனலில் விஷேச நாட்களில் ஆக்கிரமிப்பு செய்யும் முக்கியமான படமான மம்முட்டி நடித்த 'மாயாவி' இவர் இயக்கியதுதான். அதை தொடர்ந்து மம்முட்டியை வைத்து 'சட்டம்பிநாடு' என்கிற ஹிட்டும், 'வெனிசில் வியாபாரி' என்கிற பிளாப் படமும் கொடுத்திருந்தார் ஷபி.
சில மாதங்களுக்கு முன்பு திலீப்பை வைத்து இவர் இயக்கிய '2 கண்ட்ரீஸ்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, 100 நாட்கள் ஓடி வசூலையும் வாரிக்குவித்தது.. இந்த நிலையில் இயக்குனர் ஷபி மீண்டும் ஐந்தாவது முறையாக மம்முட்டியுடன் இணையப்போகிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. இந்தப்படத்தின் கதையை ஷபியின் தம்பியும் இயக்குனரும் கதாசிரியருமான ரபி மெக்கார்டின் எழுதவுள்ளார். யார தான் '2 கண்ட்ரீஸ்' படத்திற்கு கதை எழுதியவர். அடுத்த வருட விஷு கொண்டாட்டமாக இந்தப்படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.