ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம் தெலுங்கில் மஜ்னு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. பிரேமம் படத்தில் நடித்த அனுபமா, மடோனா செபஸ்டியன் தெலுங்கு பிரேமம் ரீமேக்கிலும் நடிக்கின்றனர். நாக சைதன்யனா நாயகனாக நடிக்கும் மஜ்னு படத்தை இயக்குனர் சண்டூ மொன்டேடி இயக்குகின்றார். பிரேமம் படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தில் இடம்பெறவிருக்கும் காதல் பாடலுக்காக படக்குழு நார்வே செல்லவுள்ளது. நார்வே படப்பிடிப்பு ஜூலை 14ல் துவங்கும் என படக்குழு கூறுகின்றது. இந்நிலையில் மஜ்னு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் ஆகஸ்ட் இறுதியில் மஜ்னு திரைப்படம் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது.