ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்களில் ஒரு கலக்கு கலக்கியவர் தான் மெகாஸ்டார் மம்முட்டி. அந்தவகையில் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் போலீஸ் அதிகாரியாக மம்முட்டி நடித்துவரும் படம் தான் 'கசாபா'. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மோகன்லாலின் 'புலிமுருகன்' படம் வெளியாகும் அதேநாளில் அதாவது ஜூலை-7ல் இந்தப்படத்தையும் ரிலீஸ் செய்ய இருக்கிறர்களாம்.
இந்நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக நேற்று காலை 'கசாபா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஆனால் இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் மம்முட்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோ இல்லையோ, சோஷியல் மீடியாக்களின் மீம்ஸ் குரூப் மன்னர்களுக்கு நல்ல தீனி போட்டது. ஒரு ஜீப்பின் பம்பரில் அமர்ந்தபடி இரண்டு கைகளையும் பானெட்டின் மீது அகல விரித்து, நெஞ்சை விரைத்துக்கொண்டு அமர்ந்திருந்த மம்முட்டியின் படத்தில் அப்படி என்னதான் காணாததை கண்டார்களோ தெரியவில்லை விதவிதமாக மீம்ஸ்களை உருவாக்கி தள்ளிவிட்டார்கள். மோகன்லாலின் புலி முருகன் டீசர் வெளியானபோதும் இதேபோல மோகன்லாலை கிண்டல் செய்து மீம்ஸ்கள் பறந்தது குறிப்பிடத்தக்கது.