ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சரித்திர திரைப்படமான கௌதமிபுத்ர சாதர்கனி எனும் திரைப்படத்தில் நடிக்கின்றார். அவரது 100வது திரைப்படம் என்பதால் அதிக கவனத்துடன் இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்த பாலகிருஷ்ணா, தான் அல்லாத காட்சிகளின் படப்பிடிப்பின் போதும் படப்பிடிப்பில் காணப்படுகின்றாராம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மொரோகோவில் நடைபெற்றது. அங்கு இரு போர் காட்சிகள் படமாக்கப்பட்டதாம். குதிரையேற்றத்தில் அதிக அனுபவமுள்ள பாலகிருஷ்ணா சண்டைக்காட்சியின் போது குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டாராம்.இதனால் காயப்பட்ட பாலகிருஷ்ணாவை இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் மருத்துவமனைக்கு சென்று விட்டு ஓய்வெடுக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் முதலுதவி மட்டும் எடுத்துக் கொண்ட பாலகிருஷ்ணா படப்பிடிப்பை முடித்த பின்னர் மருத்துவமனைக்கு சென்றாராம்.