விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
துலகர் சல்மான் நடிப்பில் வெளியான திரில்லர் திரைப்படமான கம்மாட்டி பாடம் எனும் மலையாள படத்தின் இயக்குனர் ராஜீவ் ரவி அப்படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளார். இதில் தெலுங்கு பதிப்பில் அகிலும் ஹிந்தியில் அர்ஜூன் கபூரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஒளிப்பதிவாளராக பாலிவுட் படங்களில் பணியாற்றிய ராஜீவ் இயக்கிய கம்மாட்டி பாடம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. குளோபல் யுனைடட் மீடியா நிறுவனத்தின் சார்பில் ப்ரேம் மேனன் இப்படத்தை தயாரித்துள்ளார். அகில் தனது முதல் திரைப்படமான அகில் : தி பவர் ஆப் ஜூவா படத்தின் தோல்விக்கு பின்னர் அடுத்த படத்தில் நடிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. அனேகமாக இப்படத்தில் அகில் நடிக்கக்கூடும் என செய்திகள் கூறுகின்றன