ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபு இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில், நடித்து வரும் பிரம்மோற்சவம் திரைப்படம் மே இறுதியில் திரைக்கு வரும் என கூறபப்டுகின்றது. இப்படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இப்படத்தின் விற்பனை ரூ 100 கோடியை எட்டி சாதனை படைத்துள்ள நிலையில், தமிழில் பிரம்மோற்சவம் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. காரணம் இப்படத்தின் தமிழக விநியோக உரிமத்திற்கு ரூ 6.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதே என கூறுப்படுகின்றது. விலை அதிகமாக இருப்பதாலும் ஏற்கனவே மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு படம் தமிழில் செல்வந்தன் என்ற பெயரில் வெளிவந்து பெரிதாக வெற்றி பெறவில்லை என்பதாலும் தமிழக விநியோகஸ்தர்கள் பிரம்மோற்சவம் படத்தை வாங்க தயக்கம் காட்டுகின்றனராம்.