விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
அனுஷ்கா முதன்மை வேடமேற்று நடிக்கும் வரலாற்று திரைப்படமான பாஹ்மதி படத்தை பில்ல ஜமீந்தார் படப் புகழ் இயக்குனர் அசோக் இயக்குகின்றார். யுவி கிரியேஷன்ஸ் பெரும்பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை தபுவை படக்குழு அணுகியுள்ளது. தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை தபு இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். யுவி கிரியேசன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஹிட் அடித்த மிர்ச்சி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை நதியாவையும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனத்தார் கேட்டுள்ளனராம். ஆனால் முதலில் தபு சம்மதம் தெரிவிக்கவே அவரையே படக்குழு ஒப்பந்தம் செய்ய தீர்மானித்துள்ளதாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.