மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் த்ரிஷா நடிக்கும் திகில் படமான நாயகி படத்தை லவ் யு பங்காரம் எனும் வெற்றிப் படம் இயக்கிய இயக்குநர் கோவி இயக்குகின்றார். தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் வெளிவரும் இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. த்ரிஷா இப்படத்திற்காக பாடிய 'பயம்' எனும் பாடலும் நேற்றுமுன்தினம் வெளிவந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இவ்விழாவில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடல்களை வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக த்ரிஷா லயன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மே மாதத்தில் இப்படத்தை வெளியிட இப்படத்தின் தயாரிப்பாளர்களான கிரிதர் மற்றும் பத்மஜா முடிவு செய்துள்ளனர்.