சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் பிரம்மோற்சவம் எனும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் சமந்தாவும், மகேஷ்பாபுவும் கஷ்னம் எனும் தெலுங்கு பட டிரைலரை இணைந்து வெளியிடவுள்ளனர்.
நடிகர் ஆத்வி மற்றும் நடிகை அடா சர்மா ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இப்படத்தில் தொகுப்பாளராக பிரபலமடைந்து பின்னர் நடிகையாக மாறிய அனஷுயா பரத்வாஜ் போலீஸாக நடித்துள்ளார். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் ரவிகாந்த் இயக்கியுள்ளார். ஆக்ஷன், திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை மார்ச் 4ல் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.