ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாள சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவர் தான் நமீதா பிரமோத்... கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் ஸ்டீரியோ டைப் என்று சொல்லும் விதமாக ஒரே மாதிரியான மேனரிசங்களை காட்டி நடித்தாலும் கூட, தனது வசீகரமான முகத்தாலும், பளீர் சிரிப்பாலும் அந்த குறைகள் தெரியாமல் சமாளித்து விடுவார்.. சமீபத்தில் இவர் தன்னுடன் நடித்த தயன் சீனிவாசன் என்கிற ஹீரோவை பற்றி ஒரு பேட்டியில் சொல்லும்போது, தயன் அப்படியே என்னுடைய ஆண் வெர்ஷன்.. ரெண்டு பேருக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரி எண்ணங்கள் இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளதோடு அவருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும்போது ரொம்ப ஈஸியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்..
இவர் இப்படி குறிப்பிடுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை என்கிறார்கள் தயன் சீனிவாசன் நண்பர்கள் வட்டாரத்தினர். நடிகர் சீனிவாசனின் மகனும், இளம் இயக்குனர் வினீத் சீனிவாசனின் தம்பியும் தான் இந்த தயன் சீனிவாசன். கடந்த மாதம் வெளியான 'அடி கப்பியாரே கூட்டமணி' என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.. அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தயனை பற்றி நமீதா பிரமோத் பேட்டியில் கூறியது என்கிறார்கள். ஆனாலும் சாமர்த்தியமாக தயன் எனது பெஸ்ட் பிரண்ட் என்கிற வார்த்தையைத்தான் பயன்படுத்தியுள்ளார் நமீதா பிரமோத். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது போலத்தான் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்ப்போமே..!