ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாள நடிகை நித்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருக்கின்றார். முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் நித்யா மேனன் அவர்களுக்கு சகோதரியாக நடிக்க வரும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கின்றார். அந்த வகையில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவிருக்கும் ஜனதா கரகே படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க நித்யா மேனனிடம் பேச்சு வார்த்தை நடைபெறுகின்றதாம்.
நன்னுக்கு பிரேமதோ படத்தில் நடித்து வரும் ஜுனியர் என்.டி.ஆர் அடுத்ததாக இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் ஜனதா கரகே. இப்படத்தில் நடிகை சமந்தா நாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நித்யா மேனன் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாம்.
சமந்தாவும் நித்யா மேனனும் S/O சத்யமூர்த்தி திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். S/O சத்யமூர்த்தி படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சமந்தாவும், தங்கையாக நித்யா மேனனும் நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.