ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரும் அரசியல் பிரபலருமான பாலகிருஷ்ணா லயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிக்டேட்டர் படத்தில் நடித்து வருகின்றார். பாலகிருஷ்ணாவின் 99வது திரைப்படமான டிக்டேட்டர் படத்தை இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்கி வருகின்றார். நடிகை அஞ்சலி நாயகியாக நடிக்கும் இப்படத்தை ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இறுதி கட்டத்தை எட்டும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் நிறைவடையவுள்ளன. இப்படத்தை ஜனவரியில் பொங்கல் பண்டிகையில் திரையிடவும் படக்குழு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பாலகிருஷ்ணாவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. பாலகிருஷ்ணாவின் 100வது படமாக அமையவுள்ள அப்படத்தை இயக்குனர் பொய்யப்படி ஸ்ரீநிவாஸ் இயக்கவுள்ளாராம். இவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் சரைனொடு படத்தை இயக்கி வருகின்றார். பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை அவரது பிறந்த நாளான ஜுன் 10 ஆம் தேதி துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.