விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
டோலிவுட்டின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடித்து வரும் டிக்டேட்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பாலகிருஷ்ணாவின் 99வது திரைப்படமான இப்படத்தை இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்குகின்றார். நடிகை அஞ்சலி மற்றும் நடிகை சோனல் சவுகான் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்கின்றனர்.இப்படத்தில் நடிகை இலியானா பாலகிருஷ்ணாவுடன் குத்தாட்டம் போடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த நடிகை இலியானா ஹிந்தி பட மோகத்தால் தற்போது தெலுங்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றார். தெலுங்கிலிருந்து வரும் குத்தாட்ட பாடல்களுக்கான வாய்புகளை தவிர்த்து வந்த நடிகை இலியானா தற்போது கேட்கும் சம்பளம் தந்தால் குத்தாட்ட பாடல்களில் ஆட ரெடி என இயக்குனர்களிடம் கூறி வருகின்றாராம். அந்த வகையில் டிக்டேட்டர் படத்தில் பாலகிருஷ்ணாவுடன் குத்தாட்டம் போட ரூ.1.5 கோடி படக்கூலி கேட்டுள்ளார் இலியானா. இதற்கு சம்மதம் தெரிவித்த படக்குழு இலியானாவின் கால்ஷீட்டிற்காக காத்திருக்கின்றதாம். ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.