செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
மூன்று தினங்களுக்கு முன் மோகன்லால் நடிப்பில் வெளியான 'கனல்' படம் மோகன்லால் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுவான ஆடியன்சிடமும் நல்ல பெயரை பெற்றுள்ளது. மோகன்லாலை வைத்து ஏற்கனவே 'சிகார்' படத்தை இயக்கிய பத்மகுமார் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். பழிவாங்கும் கதையை ஒரு புதிய கோணத்தில் சொன்ன இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மூன்றையும் எழுதியவர் சுரேஷ்பாபு.. இதற்குமுன் 'சிகார்' படத்தின் வெற்றியிலும் மிக முக்கிய பங்குவகித்தவர் தான் இந்த சுரேஷ்பாபு..
இப்போது கனல் படமும் நன்கு பேசப்படுவதால் மோகன்லாலின் அன்புக்கு பாத்திரமானவர் ஆகிவிட்டார் சுரேஷ்பாபு. பிறகென்ன..? கதாசிரியர்களாக இருப்பவர்கள் சூப்பர்ஸ்டார்களின் கடைக்கண் பார்வை பட்டால் இயக்குனர்களாக மாறுவது தானே சினிமா வழக்கம். அதனால் மோகன்லாலுக்காக தான் பிரத்யேகமாக எழுதி வைத்துள்ள கதையை மோகன்லாலிடம் சொல்ல, சுரேஷ் பாபுவையே அந்தப்படத்தை இயக்கச்சொல்லி விட்டாராம் மோகன்லால். படத்திற்கு 'டாக்கீஸ்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது... 'உதயநாணுதாரம்' படத்திற்குப்பின் சினிமா பின்னணியில் மோகன்லால் நடிக்கும் கதை இதுவாகத்தான் இருக்கும்.