ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் ஜெயம் ரவி, நடிகை நயன்தாரா, நடிகர் அரவிந்த் சாமி மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த தனி ஒருவன் படம் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றி வாகை சூடியது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஸ்டைலாக தோன்றிய அரவிந்த் சாமி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். இப்படத்தில் நடித்தற்காக பலராலும் பாராட்டப்பட்ட அரவிந்த் சாமியை தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஒரே கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க விருப்பமில்லை எனக் கூறி அரவிந்த் சாமி மறுத்து விட்டார். தனி ஒருவன் படத்தை தெலுங்கில் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார். நடிகர் ராம் சரண் இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். அரவிந்த் சாமி மறுத்த பின்னர் ராணா, சுதீப், மாதவன், நரா ரோஹித் போன்றோரின் பெயர்கள் இப்படத்தில் வில்லனாக நடிக்கப்பதாக அடிபட்டது. ஆனால் ராம் சரண் கேட்டுக்கொண்டதால் அரவிந்த் சாமியே தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகின்றது.