விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கடந்த வாரம் மலையாளத்தில் ஆசிப் அலி, இந்திரஜித் இணைந்து நடித்த 'கோஹினூர்' திரைப்படம் வெளியானது. இந்தப்படத்தை ஆசிப் அலியே தயாரித்தும் இருந்தார். படம் ஓரளவு நன்றாக இருந்தாலும் கூட வசூல் ரீதியான வரவேற்பு இல்லை. அதுவும் தவிர கேரளா எங்கும் கடந்த இரண்டு வாரமாக 'என்னு நிண்டே மொய்தீன்' பற்றிய பேச்சாகவே இருப்பதால் மக்கள் கூட்டம் அந்தப்படத்திற்குத்தான் படைஎடுத்துக்கொண்டு இருக்கின்றது.. இதில் ஜீத்து ஜோசப்பின் டைரக்சனில் திலீப் நடித்து வெளியான 'லைப் ஆப் ஜோஸுட்டி'யின் நிலைமையும் கூட பரிதாபம் தான். அதுமட்டுமல்ல, கடந்த திங்கள் கிழமையன்று இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் உள்ள தியேட்டரில் பத்து பேர் கூட வராததால் 'கோஹினூர்' பட இரவுக்காட்சி ரத்து செய்யப்பட்டது. அதேசமயம் அதே ஊரில் இருக்கும் இன்னொரு திரையரங்கில் 'என்னு நிண்டே மொய்தீன்' இரவுக்காட்சி ஹவுஸ்புல்லாக ஓடியதையும் காண முடிந்தது.
இந்த நிலையில் 'கோஹினூர்' படத்தை ஆசிப் அலி தயாரித்தது பற்றி இயக்குனரும் தயாரிப்பாளருமான எம்.ஏ.நிஷாத் என்பவர் கிண்டலாக கமெண்ட் அடித்தார்.. அதாவது “ஆனை முக்கியது கண்டு அண்ணனும் முக்கியால்” என்கிற பழமொழியை உதாரணம் காட்டி, ஆசிப் அலி எல்லாம் படம் தயாரிக்க வந்துவிட்டாரே என்கிற ரேஞ்சில் கொஞ்சம் தரம் தாழ்ந்து விமர்சித்திருந்தார். ஆனால் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு இவரும் ஒன்றும் பெரிய அப்பாடக்கர் அல்ல.. சுமாரான படங்களை தந்தவர்தான். சொல்லப்போனால் ஒரு காலத்தில் ஆசிப் அலியை வைத்து படம் இயக்கி, தயாரித்தவர் தான்.
ஆசிப் அலி மீது ஏதோ ஒருகட்டத்தில் ஏற்பட்ட மனக்கசப்பில் தான் இவ்வாறு அவர் பேசியுள்ளதாக தெரிகிறது.. ஆனால் அவரது கமெண்ட் ஆசிப் அலி ரசிகர்களை கோபத்திற்கு ஆளாக்கிவிட, “அடுத்தவரை பற்றி குறைசொல்லும் முன் நீங்கள் உங்கள் ஸ்டேட்ஸ் என்ன என பார்த்துக்கொண்டு பேசுவது நல்லது.” என்கிற ரீதியில் காட்டமாக பதிலடி கொடுத்து வருகிறார்களாம். ஆனால் இதுபற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாத நிஷாத், 'என்னு நிண்டே மொய்தீன்' படம் சூப்பராக இருக்கிறது என மீண்டும் அவர்களை வெறுப்பேற்றும் வகையில் பதிவிட்டுள்ளார்.