என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள தியேட்டர்களில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் தமிழகத்தை விட அதிகமாக இருக்கும். ஆந்திரா, தெலுங்கானாவில் புதிய படங்கள் வெளியாகும் போது ஒரு வாரத்திற்காவது கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அரசு அனுமதி அளிக்கும். கர்நாடகாவில் 900, 1000 வரை டிக்கெட் கட்டணங்கள் இருக்கும். இதைக் குறைக்க கர்நாடகா அரசு முடிவு செய்து, சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டது.
அதனடிப்படையில் சிங்கிள் தியேட்டர்களிலும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் அதிகபட்ச கட்டணமாக 200 ரூபாயும், 75 இருக்கைகள் கொண்ட பிரிமியம் தியேட்டர்களுக்கு அதிலிருந்து விலக்கும் அளித்து அரசாணை பிறப்பித்தது. நேற்று முதல் இது நடைமுறைக்கு வந்தது. ஜிஎஸ்டியுடன் சேர்த்து தற்போது 236 ரூபாய் அதிகபட்ச கட்டணமாக உள்ளது. ஆன்லைன் இணையதளங்கள், தியேட்டர் கவுன்டர்கள் ஆகியவற்றில் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டது.
இந்த டிக்கெட் கட்டணக் குறைப்புக்கு ரசிகர்கள் பெருமளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர்.