தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் கடந்த 2017ல் 'தொண்டிமுதலும் திரிக் சாட்சியமும்' என்கிற படம் வெளியானது. இதற்கு முந்தைய வருடம் தான் பஹத் பாசிலை வைத்து 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்கிற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் திலீஷ் போத்தன் தான் இந்த படத்தை இயக்கினார். இதற்கு கதை மற்றும் திரைக்கதையை கதாசிரியர் சஜீவ் பழூர் எழுதியிருந்தார். இந்த படத்திற்காக சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்கிற பிரிவில் தேசிய விருதும் பெற்றார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனராக அறிமுகமாகி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் சஜீவ் பழூர். இந்த படத்தில் கதாநாயகனாக சேத்தன் சீனு நடித்துள்ளார். இவர் தமிழில் 'கருங்காலி', தெலுங்கில் 'மந்த்ரா 2, ராஜு காரி கதி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், தற்போது கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜென்டில்மேன் 2' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாமல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. தெலுங்கு, மலையாளம் என இரு மொழி படமாக இது உருவாகிறது.