ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… | காதலர் தின ஸ்பெஷல் 4 ரீ ரிலீஸ் | பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆகும் படங்கள்… | ஆண் கர்ப்பமானால்... தமிழில் தயாராகியுள்ள வெப் தொடர் |

1993-ல் ஷங்கர் இயக்கிய முதல் படம் ஜென்டில்மேன். அர்ஜுன், மதுபாலா நடித்த இந்த படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரித்திருந்தார். பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தான் தயாரிக்க இருப்பதாக கே.டி. குஞ்சுமோன் அறிவித்திருந்தார். பாகுபலி படத்தின் இசை அமைப்பாளரான மரகதமணி இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் இந்த படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில் சில தினங்களில் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.




